search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மக்கள் தொடர்பு திட்ட முகாம்"

    • மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடந்தது.
    • இதில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் வழங்கினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் வெண்ணத்தூர் ஊராட்சி, சம்பை கிராமத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது.

    இதில் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் கலந்து கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    மக்கள் தொடர்பு முகாம் நடைபெறும் கிராமத்தில் ஒரு மாதத்திற்கு முன்பாக அரசின் அனைத்துத் துறைகளின் அலுவலர்கள் சம்மந்தப்பட்ட கிராமத்தில் முகாமிட்டு அந்த கிராம மக்களின் கோரிக்கைகள் அடங்கிய மனுவினை நேரடியாக பெறுவார்கள்.

    மக்களைத் தேடி வந்து மனுக்களை மட்டும் பெறாமல் மனுக்கள் மீதான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. தீர்வு காணப்பட்ட மனுக்க ளுக்கு அரசின் நலத் திட்டங்கள் வழங்கப்படுகின்றன. மக்கள் தொடர்பு முகாமில் அனைத்து துறை சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விளக்கும் வகையில் அரங்கு கள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் அரசின் திட்டங்களை அறிந்து கொண்டு பயன் பெறலாம். அதேபோன்று தற்போது இணையதளம் மூலம் அரசின் அனைத்து துறை களின் திட்டங்கள் குறித்து சமூக வலைதளங்களில் ஸ்மார்ட்போன் மூலம் அறிந்து பயன்பெறலாம். தனிநபர் பொருளாதர முன்னேற்றத்திற்கு அரசு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதை தகுதியுடையோர் பயன்பெற்றிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதைத்தொடர்ந்து 68 பயனாளிகளுக்கு ரூ.4.25 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் கோபு, ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் பிரபாகரன், ராமநாதபுரம் வட்டாட்சியர் சுரேஷ் குமார், ஊராட்சி மன்ற தலைவர் ஹேமலதா, அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×